இளம் பருவத்தினருக்கான பாதுகாப்பு அம்சங்கள்

Snapchat-ஐ கேளிக்கையான மற்றும் பாதுகாப்பான சுற்றுப்புறமாக ஆக்குவதே எங்களின் குறிக்கோளாகும். நெருங்கிய நண்பர்களுடன் இணைவதில் கவனம் செலுத்தி, அந்நியர்களிடமிருந்து தேவையற்ற தொடர்பைத் தவிர்த்து, வயதிற்கு ஏற்ற உள்ளடக்க அனுபவத்தை வழங்குவதன் மூலம் இளம் பருவத்தினருக்குக் கூடுதல் பாதுகாப்பை வழங்குகிறோம். எங்களின் Snapchat பாதுகாப்பு அம்சங்கள் குறித்து அறிந்துகொள்ள வேண்டிய முக்கியமான விஷயங்கள் இதோ.

Snapchat பாதுகாப்பு அம்சங்களின் விளக்கம்

இளம் பருவத்தினருக்கான எங்களின் முக்கிய பாதுகாப்புகளின் விவரம்

தேவையற்ற தொடர்புகளுக்கு எதிரான பாதுகாப்பு

ஒரு டீனேஜர் Snapchat-இல் ஒருவருடன் நண்பராகும் போது, அவர் அவர்களுக்குத் தெரிந்தவராகவும் அவர்கள் நம்பக்கூடியவராகவும் இருப்பது குறித்து நாங்கள் உறுதியாக இருக்க விரும்புகிறோம். இதைச் செய்வதற்கு நாங்கள்:

 • Snapchat-இல் அவர்கள் நண்பர்களாக இருந்தால் அல்லது அவர்களின் போனில் ஏற்கனவே உள்ள தொடர்பாக இருந்தால் தவிர டீனேஜர்களை மற்றொரு நபருடன் நேரடியாகத் தொடர்புகொள்ள அனுமதிப்பதில்லை

 • பல பரஸ்பர நண்பர்கள் அல்லது ஏற்கனவே ஃபோன் தொடர்புகளில் இருந்தால் தவிர, அவர்களை தேடல் முடிவுகளில் காட்ட அனுமதிக்காததன் மூலம் Snapchat இல் டீனேஜர்களை அந்நியர்கள் கண்டறிவதைக் கடினமாக்குகிறோம். அமெரிக்கா, பிரிட்டன், ஆஸ்திரேலியா மற்றும் கனடா போன்ற பல நாடுகளில், டீனேஜர்கள் அவர்களது நண்பர் நெட்வொர்க்குக்கு வெளியே மற்றொரு பயனருக்கு பரிந்துரைக்கப்படும் நண்பராகக் காட்டப்படுவதையும் நாங்கள் கடினமாக்குகிறோம்.

 • உங்கள் டீனேஜர் ஒருவருடன் நட்பைத் தொடரவேண்டும் என நினைத்தால், அவர்களை பிளாக் செய்வதற்கு எளிதான Snapchat பாதுகாப்புக் கருவிகளை அவர்களுக்கு வழங்குகிறோம். 

 • டீனேஜர்களுடன் பரஸ்பர நண்பரைப் பகிர்ந்துகொல்லாத ஒருவர் அவரைத் தொடர்புகொள்ள முயர்ன்றால் டீனேஜர்களுக்கு செயலியில் எச்கரிக்கை அனுப்புகிறோம். 

கடுமையான தீங்குகளுக்கு பூஜ்ஜிய சகிப்புத்தன்மை

மற்றொரு Snapchat பயனருக்கு கடுமையான உடல் அல்லது உணர்வுரீதியான தீங்கு விளைவிப்பது போன்ற கடுமையான குற்றங்களைச் செய்வதன் மூலம் எங்கள் விதிகளை மீறுபவர்களை நாங்கள் துளி கூட பொறுத்துக்கொள்வதில்லை. இதுபோன்ற நடத்தையை நாங்கள் கண்டறிந்தால், அவர்களின் கணக்குகளை நாங்கள் உடனடியாக முடக்குவதோடு அவர்கள் Snapchat-இல் மீண்டும் நுழைவதைத் தடுக்கும் நடவடிக்கைகளை எடுக்கிறோம். அவசரநிலைகளை நாங்கள் சட்ட அமலாக்கத்திற்கும் மேல்முறையீடு செய்து அவர்களின் விசாரணைகளுக்கு ஆதரவளிக்க வேலை செய்கிறோம்.

Snapchat டீன்களுக்கான வயதுக்குப் பொருத்தமான உள்ளடக்கம்

Snapchat நண்பர்களுக்கு இடையிலான தனிப்பட்ட தகவல் தொடர்புக்காக மிகப்பொதுவாகப் பயன்படுத்தப்பட்டாலும், நாங்கள் இரண்டு முக்கிய உள்ளடக்கத் தளங்களை வழங்குகிறோம் — கதைகள் மற்றும் ஸ்பாட்லைட் — இங்கு snapchat பயனர்கள் தேர்ந்தெடுக்கப்பட்ட ஊடக நிறுவனங்கள், சரிபார்க்கப்பட்ட படைப்பாளிகள் மற்றும் Snapchat பயனர்களி வெளியிடும் பொதுக் கதைகள் மற்றும் வீடியோக்களை கண்டறியமுடியும். 

எங்கள் செயலியின் இந்தப் பிரிவுகளில், மட்டுப்படுத்தப்பட்டாத உள்ளடக்கம் பரவலாகப் பகிரப்படும் திறனைக் கட்டுப்படுத்துகிறோம். இந்தப் பொது உள்ளடக்கம் அதிகப் பார்வையாளர்களுக்கு ஒளிப்பரப்பப்படும் முன்னர் அது எங்கள் வழிகாட்டுதல்களுக்கு இணங்குகிறதா என்பதை உறுதிசெய்ய பாதுகாப்புக் கண்டறிதல் கருவிகள் மற்றும் கூடுதல் மதிப்பாய்வுச் செயல்முறைகளை நாங்கள் பயன்படுத்துகிறோம்.  

குறிப்பாக Snapchat-இல் உள்ள டீனேஜர்களுக்கு, அவர்கள் வயதுக்குப் பொருத்தமான உள்ளடக்க அனுபவத்தைப் பெறுவதை உறுதிசெய்ய எங்களிடம் கூடுதல் பாதுகாப்புகள் உள்ளன. , இதைச் செய்வதற்கு நாங்கள்:

 • வயதிற்குப் பொருத்தமற்ற உள்ளடக்கத்தைச் சந்தைப்படுத்த முயலும் பொது கணக்குகளைக் கண்டறிய வலுவான முன்கூட்டியே கண்டறியும் கருவிகளைப் பயன்படுத்துகிறோம், இந்தமாதிரியான கணக்குகளைத் திறம்பட நீக்க புதிய ஸ்டிரைக் அமைப்பைப் பயன்படுத்துகிறோம்.

 • எங்களின் Snapchat பெற்றோர் கட்டுப்பாடுகளின் ஒரு பகுதியாக கடுமையான உள்ளடக்க வரம்புகளை அமைக்கும் திறனை பெற்றோருக்கு வழங்குகிறோம். Snapchat இன் குடும்ப மையம், Snapchat இல் டீனேஜர்கள் யாருடன் பேசுகிறார்கள் என்பதைக் கண்காணிக்கவும், உள்ளடக்கக் கட்டுப்பாடுகளை அமைக்கவும் பெற்றோரை அனுமதிக்கிறது - இது பற்றிய முக்கியமான உரையாடல்களைத் தூண்டுவதற்கு இது உதவும்.

இங்கு மேலும் கண்டறியுங்கள்.

டீனேஜர்களுக்கான வலுவான இயல்புநிலை அமைப்புகள்

நிஜவாழ்க்கையில், நட்புகள் பாதுகாப்பு, பத்திரம் மற்றும் தனியுரிமை ஆகிய உணர்வுகளுடன் வரவேண்டும், அதே கொள்கையைத் தான் நாங்கள் Snapchat-இலும் பயன்படுத்துகிறோம். அதனால்தான் டீன் ஏஜ் வயதினருக்கான முக்கிய பாதுகாப்பு மற்றும் தனியுரிமை அமைப்புகளை மிகக் கடுமையான தரநிலைகளுக்கு இயல்புநிலையாக மாற்றுகிறோம். இதைச் செய்வதற்கு நாங்கள்:

 • டீனேஜர்களுக்கான தொடர்பு அமைப்புகள் நண்பர்கள் மற்றும் தொலைபேசித் தொடர்புகளுக்கு மட்டுமே அமைக்கப்பட்டுள்ளன, மேலும் அவற்றை அந்நியர்களுக்கு நீட்டிக்கமுடியாது. ஏற்கனவே Snapchat நண்பராக இல்லாத அல்லது அவர்களின் தொலைபேசி தொடர்புகளில் இருக்கும் மற்றொரு நபரால் டீனேஜரைத் தொடர்பு கொள்வதைத் தடுக்க இந்தப் பாதுகாப்பு உதவுகிறது. 

 • இருப்பிடத்தைப் பகிர்வதை இயல்புநிலையாக அணைத்துவைக்கிறோம். Snapchat பயனர்கள் எங்கள் Snapchat வரைபடத்தில் இருப்பிடத்தைப் பகிர்வதற்கான அம்ஸத்தைப் பயன்படுத்த முடிவு செய்தால், அவர்கள் ஏற்கனவே நண்பர்களாக இருக்கும் நபர்களுடன் மட்டுமே தங்கள் இருப்பிடத்தைப் பகிரமுடியும்.

 • டீனேஜர்கள் தங்கள் தனியுரிமை அமைப்புகள் மற்றும் கணக்குப் பாதுகாப்பைச் சரிபார்க்க அவர்களுக்கு தவறாமல் நினைவூட்டல்கள் அனுப்புகிறோம். டீனேஜர்கள் இரு காரணி அங்கீகாரத்தைச் செயல்படுத்துவதையும் தங்களது மின்னஞ்சல் மற்றும் தொலைபேசி எண்ணைச் சரிபார்ப்பதையும் பரிந்துரைக்கிறோம். இது Snapchat இல் டீனேஜர்களின் கணக்கு ஹேக் செய்யப்படுவதைத் தடுக்க உதவுகிறது மற்றும் அவர்களின் தனிப்பட்ட தகவலைப் பாதுகாக்க உதவுகிறது.

விரைவான மற்றும் எளிதான புகாரளிக்கும் கருவிகள்

Snapchat இல் டீனேஜர்கள் மற்றும் பெற்றோர்கள் இருவருக்கும் பாதுகாப்புக் கவலையை Snapchat இல் நேரடியாகப் அறிக்கையிட எளிதான வழிகளை நாங்கள் வழங்குகிறோம். Snapchat கணக்கு ஒன்றைப் பயன்படுத்தத் தேவைப்படாத ஆன்லைன் புகாரளிக்கும் கருவிகளையும் நாங்கள் வழங்குகிறோம். 

 • Snapchat இல் புகாரளிப்பது இரகசியமானது. Snpachat பயனர்களின் அவர்களைப் பற்றி யார் புகாரளித்தார்கள் என்பதை நாங்கள் சொல்வதில்லை.

 • எங்களிடம் 24/7 உலகளாவிய நம்பிக்கை மற்றும் பாதுகாப்பு குழு இருக்கிறது. நீங்களோ உங்கள் டீனேஜரோ ஒன்றைப் புகாரளிக்கும் சமயம், அது நேரடியாக எங்கள் நம்பிக்கை மற்றும் பாதுகாப்புக் குழுவிற்குச் செல்கிறது, இதன்மூலம் அவர்கள் விரைவாக நடவடிக்கை எடுக்கமுடியும். 

 • Snapchat இல் உள்ள உரையாடல்கள் இயல்பாகவே நீக்கப்பட்டாலும், டீனேஜர்கள் அல்லது பெற்றோரின் புகார்களை மதிப்பாய்வு செய்யும் போது தரவைத் தக்க வைத்துக் கொள்கிறோம். சில சந்தர்ப்பங்களில், சட்ட அமலாக்கதிற்கு ஒரு சம்பவத்தைத் தெரிவிப்பதும் இதில் அடங்கலாம். ஒருவேளை அதிகாரிகள் பின்தொடர விரும்பினால், இந்தத் தரவை இன்னும் நீண்ட காலத்திற்கு நாங்கள் தக்கவைப்போம்.

Snapchat 13+ வயதுள்ள டீனேஜர்களுக்கு மட்டுமே

Snapchat கணக்கை உருவாக்க டீனேஜர்களுக்கு குறைந்தது 13 வயதாகியிருக்க வேண்டும். ஒரு கணக்கு 13 வயதுக்குட்பட்ட ஒருவருடையது என்பது எங்களுக்குத் தெரியவந்தால், அவர்களது கணக்கை தளத்திலிருந்து நீக்கிவிட்டு, அவர்களின் தரவை நீக்குவோம்.

உங்கள் டீன் ஏஜ் பிள்ளைகள், டீனேஜர்களுக்கான எங்கள் பாதுகாப்பிலிருந்து பயனடைய, துல்லியமான பிறந்ததேதியுடன் பதிவு செய்வது மிகவும் முக்கியம். டீனேஜர்கள் இந்தப் பாதுகாப்புகளைத் தவிர்ப்பதைத் தடுக்க, ஏற்கனவே உள்ள Snapchat கணக்குகளைக் கொண்ட 13-17 வயதுடையவர்கள் தங்கள் பிறந்த ஆண்டை 18 வயது அல்லது அதற்கு அதிகமாக மாற்ற அனுமதிக்க மாட்டோம்.

பெற்றோருக்கான கருவிகள் மற்றும் வளங்கள்

பெற்றோர் மற்றும் பராமரிப்பாளர்களுக்கான கருவிகள் மற்றும் வளங்களைப் பற்றி அறிந்துகொள்ளுங்கள்.