
Snapchat குடும்பப் பாதுகாப்பு மையம்
Snapchat வழக்கமான சமூக ஊடகங்களில் இருந்து வித்தியாசமானதாக வடிவமைக்கப்பட்டுள்ளது, இது பாதுகாப்பிற்கும் தனியுரிமைக்கும் முன்னுரிமை அளிக்கும் ஒரு சூழ்நிலையில் நெருங்கிய நண்பர்கள் மற்றும் குடும்பத்தினருடனான தகவல் தொடர்புகளை மேம்படுத்துவதை இலக்காகக் கொண்டுள்ளது. Snapchat எப்படி இயங்குகிறது, இளம் வயதினருக்கு நாங்கள் வழங்கும் முக்கியப் பாதுகாப்புகள், எங்கள் பாதுகாப்புக் கருவிகளை எப்படிப் பயன்படுத்துவது ஆகியவற்றை அறிந்து கொள்ளுங்கள்.
பெற்றோர்களுக்கான பாதுகாப்பு வழிகாட்டிகள்

Snapchat என்றால் என்ன?
Snapchat என்பது 13 வயது மற்றும் அதற்கு மேற்பட்டவர்களுக்காக வடிவமைக்கப்பட்ட தகவல்தொடர்புச் சேவை ஆகும். இது இளம் பருவத்தினரிடமும் இளைஞர்களிடமும் பிரபலமாக உள்ளது, இதை அவர்கள் நேரடியாக உரையாடுவதைப் போலவே நெருங்கிய நண்பர்களிடம் பேசப் பயன்படுத்துகிறார்கள்.

Snapchatஇல் இளம் வயதினருக்கான பாதுகாப்புகள்
நெருங்கிய நண்பர்களுடனான தொடர்பில் கவனம் செலுத்தி, அந்நியர்களிடமிருந்து வரும் தேவையற்ற தொடர்புகளைத் தவிர்த்து, வயதுக்கு ஏற்ற உள்ளடக்க அனுபவத்தை வழங்குவதன் மூலம் Snapchatஇல் இளம் வயதினருக்கான கூடுதல் பாதுகாப்புகளை நாங்கள் வழங்குகிறோம்.

Snapchat குடும்ப மையம் பற்றி
Snapchat-இல் இளம் பருவத்தினரைப் பாதுகாக்க உதவும் எங்களின் பொறுப்பை நாங்கள் மிகவும் தீவிரமாக எடுத்துக் கொள்கிறோம்.
இதன் ஒரு பகுதியாக, Snapchatஐப் பாதுகாப்பாகப் பயன்படுத்தத் தங்கள் பிள்ளைகளுக்குப் பெற்றோர்கள் உதவுவதற்கான செயலியினுள் பாதுகாப்புக் கருவிகளையும் வளங்களையும் பெற்றோர்களுக்கு வழங்க விரும்புகிறோம்.
Snapchatஇல் பெற்றோர்களுக்கான வீடியோ வளங்கள்
Snapchat என்றால் என்ன, உங்கள் குடும்பத்தினர் ஒருவருக்கொருவர் தொடர்பில் இருக்க இது எப்படி உதவுகிறது, மற்றும் பதின்ம வயதினருக்குப் பாதுகாப்பானதாக Snapchatஐ மாற்ற நாங்கள் செயல்படுத்தியிருக்கும் பாதுகாப்புகள் பற்றிப் புரிந்துகொள்ள இந்த வீடியோக்களைப் பாருங்கள்.
Snapchat பற்றி
உங்கள் நெருங்கிய நண்பர்களுடன் உணர்வுப்பூர்வமானத் தொடர்புகளை உருவாக்கும் வகையில் Snapchat வடிவமைக்கப்பட்டுள்ளது, Snapchatஇல் இளம் பருவத்தினருக்கு ஆரோக்கியமான மற்றும் பாதுகாப்பான அனுபவத்தை வழங்க நாங்கள் உறுதிபூண்டுள்ளோம்.
அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்
Snapchat என்றால் என்ன?
Snapchat என்பது அரட்டையடித்தல், Snapping (படங்கள் மூலம் உரையாடுதல்) அல்லது குரல் மற்றும் வீடியோ அழைப்புகள் மூலம் தங்கள் நிஜ வாழ்க்கை நண்பர்கள் மற்றும் குடும்பத்தினரைத் தொடர்பு கொள்ள பெரும்பாலான மக்கள் பயன்படுத்தும் தகவல்தொடர்புச் சேவை ஆகும்.
Snapchat -க்கு வயது வரம்பு அல்லது குறைந்தபட்ச வயது இருக்கிறதா?
Snapchat கணக்கை உருவாக்க பதின்ம வயதினர்களுக்கு குறைந்தது 13 வயதாகியிருக்க வேண்டும். ஒரு கணக்கு 13 வயதிற்குட்பட்ட நபருக்கு உரியது என நாங்கள் தீர்மானித்தால், எங்கள் தளத்தில் இருந்து அந்தக் கணக்கை அகற்றி, அவர்களின் தரவை நீக்குகிறோம். உங்கள் குடும்பத்திற்கு ஒரு தகவலறிந்த முடிவை எடுக்க உங்களுக்கு உதவுவதற்காக, இந்தப் பக்கத்தில் Snapchat பற்றி நீங்கள் மேலும் அறிந்துகொள்வீர்கள் என்று நம்புகிறோம். மேலதிகத் தகவல் மற்றும் ஆதரவுக்கு காமன் சென்ஸ் மீடியாவின் Snapchat-க்கானஅல்டிமேட் வழிகாட்டியை நீங்கள் பார்க்கலாம்.
இளம் பருவத்தினர் தங்களின் பிறந்தநாளைச் சரியாகப் பதிவு செய்வது முக்கியமாகும், இதனால் அவர்கள் இளம் பருவத்தினருக்கான Snapchat பாதுகாப்புகளின் மூலம் பயனடையலாம். Snapchat இல் பதின்ம வயதினர்கள் இந்த பாதுகாப்புகளைத் தவிர்ப்பதைத் தடுக்க, ஏற்கனவே Snapchat கணக்குகளை வைத்துள்ள 13-17 வயதுடையவர்கள் தங்கள் பிறந்த ஆண்டை 18 வயது அல்லது அதற்கு மேற்பட்ட வயதிற்கு மாற்ற நாங்கள் அனுமதிப்பதில்லை.
Snapchat இளம் வயதினரை எப்படிப் பாதுகாக்கிறது?
நெருங்கிய நண்பர்களுடனான தொடர்பில் கவனம் செலுத்தி, அந்நியர்களிடமிருந்து வரும் தேவையற்ற தொடர்புகளைத் தவிர்த்து, வயதுக்கு ஏற்ற உள்ளடக்க அனுபவத்தை வழங்குவதன் மூலம் Snapchatஇல் இளம் வயதினருக்குக் கூடுதல் பாதுகாப்பை வழங்குகிறோம்.
Snapchatஇல் பாதுகாப்புக் கவலையைப் புகாரளிப்பது எப்படி?
பாதுகாப்புக் கவலைகளை இரகசியமாகப் புகாரளிக்க இளம் பருவத்தினர் மற்றும் பெற்றோர்கள் இருவருக்கும் எளிமையான வழிகளை நாங்கள் வழங்குகிறோம், நேரடியாகச் செயலியினுள் புகாரளிக்கலாம், அல்லது Snapchat கணக்கு இல்லாதவர்கள் இணையம் மூலம் புகாரளிக்கலாம்.
Snapchatக்கு என தனியுரிமை அமைப்புகள் உள்ளதா?
ஆம், இயல்புநிலையாக, Snapchatஇல் இளம் வயதினருக்கான முக்கியப் பாதுகாப்பு மற்றும் தனியுரிமை அமைப்புகளை கடுமையான தரநிலைகளுக்கு நாங்கள் அமைத்துள்ளோம்.
நண்பர்கள் மற்றும் தொலைபேசித் தொடர்புகளில் உள்ளவர்களை மட்டும் தொடர்பு கொள்ளும் வகையில் தொடர்பு அமைப்புகளை அமைத்துள்ளோம், இதை விரிவாக்க முடியாது.
இருப்பிடப் பகிர்வு அம்சம் இயல்புநிலையில் அணைக்கப்பட்டிருக்கும். Snapchat பயனர்கள் எங்கள் Snap வரைபடத்தில் இருப்பிடத்தைப் பகிர்வதற்கான அம்சத்தைப் பயன்படுத்த விரும்பினால், அவர்கள் ஏற்கனவே நண்பர்களாக இருக்கும் நபர்களுடன் மட்டுமே தங்கள் இருப்பிடத்தைப் பகிரமுடியும். நண்பராக ஏற்கப்படாத ஒருவருடன் இருப்பிடத்தைப் பகிர்வதற்கு எந்த வாய்ப்பும் இல்லை.
குடும்ப மையம் என்றால் என்ன, அதைப் பயன்படுத்துவது எப்படி?
குடும்ப மையம் என்பது எங்கள் செயலிக்குள் இருக்கும் ஓர் வசதியாகும். தங்கள் இளம் பருவப் பிள்ளைகள் யாருடன் நண்பர்களாக உள்ளனர், சமீபத்தில் யாருக்குச் செய்தி அனுப்பினர் என்பதைப் பார்த்தல், இளம் பருவப் பிள்ளைகளின் இருப்பிடத்தை அறிய கோரிக்கை விடுத்தல், Snapchatஇல் தங்கள் பிள்ளைகளின் தனியுரிமை மற்றும் பாதுகாப்பு அமைப்புகளைப் பார்த்தல் மற்றும் பலவற்றைச் செய்யும் திறனை இது பெற்றோர்களுக்கு வழங்குகிறது.
விரைவு இணைப்புகள்
தொடர்பில் இருக்க வேண்டுமா?

Developed with guidance from