பெற்றோருக்கான கருவிகள் மற்றும் வளங்கள்

Snapchat-இல் இளம் பருவத்தினரைப் பாதுகாக்க உதவும் எங்களின் பொறுப்பை நாங்கள் மிகவும் தீவிரமாக எடுத்துக் கொள்கிறோம். இதன் ஒரு பகுதியாக, இளம் பருவத்தினர் Snapchat-ஐ பாதுகாப்பாகப் பயன்படுத்துவதற்கான கருவிகளையும் வளங்களையும் அவர்களின் பெற்றோருக்கு நாங்கள் வழங்க விரும்புகிறோம். Snapchat-இன் பெற்றோர் கட்டுப்பாடுகளை எப்படிப் பயன்படுத்துவது, உங்களின் இளம் பருவப் பிள்ளைகளுடன் கலந்துரையாடுவதற்கான முக்கியமான பாதுகாப்பு குறிப்புகளுக்கான சரிபார்ப்பு பட்டியலை எப்படிப் பதிவிறக்கம் செய்வது மற்றும் நிபுணத்துவ வளங்களை எப்படி அணுகுவது என்பது குறித்து இங்கு நீங்கள் அறிந்துகொள்ளலாம்.

Snapchat பெற்றோர் கட்டுப்பாடுகள்

Snapchat-இன் குடும்ப மையம் என்பது உங்களின் இளம் பருவப் பிள்ளைகள் Snapchat-இல் யாருடன் பேசிக்கொண்டிருக்கிறார்கள் என்பதைப் பார்க்கவும் உள்ளடக்கக் கட்டுப்பாடுகளை அமைக்கவும், அவ்வாறு பாதுகாப்பு குறித்த முக்கியமான உரையாடல்களைத் தொடங்கவும் உதவும் எங்களின் பெற்றோர் கட்டுப்பாடுகள் ஆகும். குடும்ப மையம் பெற்றோர்கள் மற்றும் இளம் பருவத்தினருக்கிடையிலான நிஜ வாழ்க்கை உறவுகளின் அம்சங்களைப் பிரதிபலிக்கிறது, அங்குத் தங்களின் இளம் பருவப் பிள்ளைகளின் தனியுரிமையை மதிக்கும் அதே வேளையில் அவர்கள் யாருடன் நேரத்தைச் செலவிடுகிறார்கள் என்பதையும் பெற்றோர்கள் அறிந்து வைத்திருப்பார்கள். குடும்ப மையத்தில், Snapchat பயனர்களைப் பாதுகாப்பாக வைத்திருக்க 24 மணி நேரமும் உழைக்கும் எங்கள் நம்பிக்கை மற்றும் பாதுகாப்புக் குழுவிடம் நேரடியாகத் தொடர்புடைய எந்தக் கவலைகள் குறித்தும் பெற்றோர்கள் எளிதாகவும் ரகசியமாகவும் புகாரளிக்கலாம்.

குடும்ப மையம் குறித்து அறிந்துகொள்ளுதல்

குடும்ப மையத்தைப் பயன்படுத்தப் பெற்றோரிடம் ஒரு Snapchat கணக்கு இருக்க வேண்டும். எப்படிச் செயலியைப் பதிவிறக்கம் செய்து குடும்ப மையத்தை அமைப்பது என்பதற்கான அறிவுறுத்தல்கள் இதோ:

இந்தப் பயிற்சி விளக்கத்தைப் பார்க்கவும் அல்லது இந்தப் படிமுறை சார்ந்த அறிவுறுத்தல்களைப் படிக்கவும்.

படிமுறை 1

உங்களின் மொபைல் தொலைபேசியில் Apple App Store அல்லது Google Play Store-இலிருந்து Snapchat-ஐ பதிவிறக்கம் செய்வதன் மூலம் தொடங்கவும்.

குடும்ப மையம் குறித்து மேலும் கேள்விகள் உள்ளதா? எங்களின் உதவி தளத்திற்கு செல்லவும்.

பாதுகாப்பு சரிபார்ப்பு பட்டியல்

பெற்றோர்களுக்கானது

Snapchat-ஐ எப்படிப் பாதுகாப்பாகப் பயன்படுத்துவது என்பது குறித்த உரையாடல்களுக்கு உதவ, உங்களின் இளம் பருவப் பிள்ளைகளுக்கான முக்கிய குறிப்புகளின் சரிபார்ப்பு பட்டியல் இதோ:

குடும்பம் மற்றும் நண்பர்களுடன் மட்டும் இணையவும்

நிஜ வாழ்க்கையில் உங்களுக்குத் தெரிந்தவர்களுக்கு மட்டும் அழைப்பு விடுக்கவும் மற்றும் நண்பர் அழைப்புகளை ஏற்றுக்கொள்ளவும்.

பயனர்பெயரைக் கவனமாகத் தேர்ந்தெடுக்கவும்

உங்களின் வயது, பிறந்த தேதி, தனிப்பட்ட தகவல்கள் அல்லது மறைமுகமான அர்த்தம் தரும் வார்த்தைகளை உள்ளடக்காத பயனர்பெயரைத் தேர்வு செய்யவும். உங்களின் இளம் பருவப் பிள்ளைகளின் பயனர்பெயரானது வயது அல்லது பிறந்த தேதி போன்ற தனிப்பட்ட தகவல்களை உள்ளடக்கியதாக இருக்கக்கூடாது.

உண்மையான வயதைக் குறிப்பிட்டு பதிவு செய்யவும்

சரியான பிறந்த தேதியைக் குறிப்பிடுவது மட்டுமே உங்களின் இளம் பருவப் பிள்ளையால் வயதிற்கேற்ற எங்களின் பாதுகாப்புகளின் பலனைப் பெறுவதற்கான ஒரே வழி ஆகும்.

இருக்கும் இடத்தைப் பகிர்வதற்கு முன் கவனமாக இருக்கவும்

எங்களின் வரைபடத்தில் இயல்பாகவே அனைவருக்கும் இருப்பிடப் பகிர்வு அணைக்கப்பட்டிருக்கும். உங்களின் இளம் பருவப் பிள்ளை அதைச் செயல்படுத்தப்போகிறார் என்றால், அதை அவர்களின் நம்பகமான நண்பர்கள் மற்றும் குடும்பத்தினரிடம் மட்டுமே பயன்படுத்த வேண்டும்.

நம்பகமானவர்களிடம் மட்டும் பேசவும்

பாதுகாப்பு மற்றும் நலன் என்று வரும்போது, தவறான கேள்விகள் அல்லது உரையாடல்கள் என்று எதுவும் இல்லை. உங்களின் இளம் பருவப் பிள்ளைக்கு எதாவது கவலை இருந்தால் நம்பகமானவர்களிடம் மட்டும் பேசும்படி அவர்களிடம் கூறவும்.

செயலியில் உள்ள புகாரளித்தல் அம்சத்தைப் பயன்படுத்தல்

புகார்கள் இரகசியமானது என்றும் - மதிப்பாய்விற்காக எங்களின் 24/7 நம்பிக்கை மற்றும் பாதுகாப்பு குழுவிற்கு நேரடியாக அனுப்பப்படும் என்பதை உங்களின் இளம் பருவப் பிள்ளை அறிந்துகொள்ள வேண்டும்.

அனுப்புவதற்கு முன் சிந்திக்கவும்

இணையத்தில் எதையும் பகிரும்போது, யாரிடமும் - வாழ்க்கை துணை அல்லது நெருங்கிய நண்பரிடம் கூட - தனிப்பட்ட அல்லது முக்கியமான படங்கள் மற்றும் தகவல்களைக் கேட்கும்போது அல்லது அனுப்பும்போது கவனமாக இருக்க வேண்டும்.

Snapchat-இன் குடும்ப மையத்தில் சேரவும்

நீங்களும் உங்களின் இளம் பருவப் பிள்ளையும் எங்களின் பெற்றோர் கட்டுப்பாடுகளில், Snapchat-இன் குடும்ப மையத்தில் இணைந்திருப்பதை உறுதி செய்யவும், அதை உங்களின் இளம் பருவப் பிள்ளைகள் யாருடன் பேசிக்கொண்டிருக்கிறார்கள் என்பதைப் பார்க்கலாம் மற்றும் உள்ளடக்கக் கட்டுப்பாடுகளை அமைக்கலாம்.

அறிந்துகொள்ள உதவிகரமானது! இந்த சரிபார்ப்புப் பட்டியலின் பதிவிறக்கக்கூடிய பதிப்பை அச்சிட, இங்கேகிளிக் செய்யவும்.

கூடுதல் தகவலுக்கு, எங்கள் கூட்டாளர்கள் மற்றும் நிபுணர்களிடமிருந்து பாதுகாப்பு ஆதாரங்களைபாருங்கள்.