Snapchat 101

Snapchat என்பது 13 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட வயதுடையவர்களுக்காக வடிவமைக்கப்பட்டுள்ள ஒரு தகவல்தொடர்பு சேவை ஆகும். இது இளம் பருவத்தினரிடமும் இளைஞர்களிடமும் மிகவும் பிரபலமானது, இதை அவர்கள் நிஜ வாழ்க்கையில் உரையாடுவதைப் போலவே அவர்களின் நெருங்கிய நண்பர்களிடம் பேசப் பயன்படுத்துகிறார்கள். இது பழைய தலைமுறையினர் தங்களின் நண்பர்கள் மற்றும் குடும்பத்துடன் தொடர்பில் இருக்க உரை செய்தி அல்லது தங்களின் தொலைபேசியைப் பயன்படுத்துவது போன்றதாகும். நீங்கள் Snapchat-ஐ பயன்படுத்தியதில்லை என்றால், இந்தச் செயலி எப்படி வேலை செய்கிறது என்பதைப் பற்றிய விரைவான பார்வை இதோ.

அடிப்படைகள்

ஆரோக்கியமான மற்றும் பாதுகாப்பான அனுபவத்தை வழங்குவதே எங்களின் குறிக்கோளாகும், மேலும், அந்த நோக்கத்திற்காகவே நாங்கள் Snapchat-ஐ சமூக ஊடகத்திலிருந்து வித்தியாசமாக வடிவமைத்துள்ளோம். Snapchat விருப்பங்கள் மற்றும் கருத்துகளுடன் உள்ள ஒரு பொதுச் செய்தியைத் திறக்காது. மாறாக, செயலி நேரடியாகக் கேமராவைத் திறக்கும் மற்றும் அதில் ஐந்து டேப்கள் இருக்கும்: கேமரா, அரட்டை, வரைபடம், கதைகள், மற்றும் ஸ்பாட்லைட். மேலும் அறிந்துகொள்ள இந்த வீடியோவைப் பார்க்கவும்:

Snapchat, விளக்கம்

Snapchat-இல் செய்தி அனுப்புதல் எப்படி வேலை செய்கிறது

நிஜ வாழ்க்கை உரையாடல்களைப் பிரதிபலிக்கும் வகையில் Snapchat உரையாடல்கள் இயல்பாகவே நீக்கப்படும். சமூக ஊடகம் வருவதற்கு முன், நண்பர்களுடனான நம் கேளிக்கையான, தன்னிச்சையான மற்றும் வேடிக்கையான உரையாடல்கள் நம் நினைவுகளில் மட்டுமே இருந்தன! இதைப் பிரதிபலிக்கும் வகையிலும், அழுத்தம் அல்லது தீர்ப்பிடப்படுவது போல் உணராமல் தங்களைச் சௌகரியமாக வெளிப்படுத்துவதற்காக மக்களுக்கு உதவ Snapchat வடிவமைக்கப்பட்டுள்ளது.

Snapchat-இல் உள்ள உரையாடல்கள் இயல்பாக நீக்கப்படும் என்றாலும், இளம் பருவத்தினர் மற்றும் பெற்றோரின் தீங்கு விளைவிக்கும் உள்ளடக்கப் புகார்களை மதிப்பாய்வு செய்யும் போது நாங்கள் தரவுகளைத் தக்கவைப்போம் என்பதை அறிந்துகொள்ளுங்கள். சில சந்தர்ப்பங்களில், சட்ட அமலாக்கத்திற்கான சம்பவத்தை இது உள்ளடக்கியதாக இருக்கும். அதிகாரிகள் பின்தொடர விரும்பினால், நாங்கள் இந்தத் தரவை இன்னும் அதிகமான காலத்திற்குத் தக்கவைப்போம், மேலும் குற்றவாளிகளை நீதிக்கும் முன்னால் கொண்டுவர உதவுவதற்காகச் சட்ட அமலாக்கத்துடன் நாங்கள் பணியாற்றுகிறோம்.

அறிந்துகொள்ள உதவிகரமானது! Snapகள் மற்றும் அரட்டைகள் இயல்பாக நீக்கப்படலாம், ஆனால் ஒரு நபரின் ஒப்புதல் இல்லாமல் யார் வேண்டுமானாலும் கணினி அல்லது கைப்பேசி திரையிலிருந்து எதை வேண்டுமானாலும் திரை பதிவு செய்துகொள்ளலாம். இணையத்தில் எதையும் பகிரும்போது, யாரிடமும் - வாழ்க்கை துணை அல்லது நெருங்கிய நண்பரிடம் கூட - தனிப்பட்ட அல்லது முக்கியமான படங்கள் மற்றும் தகவல்களைக் கேட்கும்போது அல்லது அனுப்பும்போது கவனமாக இருக்க வேண்டும்.

சமூக வழிகாட்டுதல்கள்

Snapchat பயனர்கள் எங்களின் சேவைகளைப் பாதுகாப்பாகப் பயன்படுத்த உதவுவதற்காக எங்களிடம் தெளிவானசமூக வழிகாட்டுதல்கள் உள்ளன. இந்த விதிகளானது, பாலியல் சுரண்டல், ஆபாச படங்கள், சட்டவிரோத போதை பொருள் விற்பனை, வன்முறை, சுய தீங்கு, மற்றும் தவறான தகவல்கள் போன்ற சட்டவிரோதமான மற்றும் தீங்கு விளைவிக்க வாய்ப்புள்ள உள்ளடக்கம் மற்றும் நடத்தைகளைத் தடை செய்கிறது. எங்களின் விதிகளை மீறும் உள்ளடக்கம் பெரும் எண்ணிக்கையிலான பார்வையாளர்களைச் சென்றடைவதைத் தடுக்கும் வகையில் எங்களின் பொது உள்ளடக்க தளங்கள், கதைகள் மற்றும் ஸ்பாட்லைட்டில் நாங்கள் கூடுதல் சீராக்கத்தைப் பயன்படுத்துகிறோம். எங்களின் சமூக

வழிகாட்டுதல்களின் மீறல்களுக்கு எதிராக அமலாக்கம் செய்யவும், எதாவது ஆபத்துகளைத் தவிர்க்கவும், தீவிரமான கண்டறிதல் கருவி மற்றும் Snapchat பயனர்கள், பெற்றோர்கள் மற்றும் சட்ட அமலாக்கத்திடமிருந்து வரும் புகார்களை நாங்கள் பயன்படுத்துகிறோம். எங்களிடம் இந்தப் புகார்களை விசாரணை செய்யும் 24/7 உலகளாவிய நம்பிக்கை மற்றும் பாதுகாப்பு குழு உள்ளது, மேலும் பெரும்பாலான சந்தர்ப்பங்களில், Snapchat-இன் பாதுகாப்பு தரநிலைகளைச் செயல்படுத்துவதற்காக அவர்கள் ஒரு மணி நேரத்திற்குள் நடவடிக்கை எடுக்கிறார்கள். பயனர்களை எச்சரித்தல், உள்ளடக்கத்தை நீக்குதல், கணக்கைத் தடை செய்தல், சட்ட அமலாக்கத்திற்குப் புகார் அனுப்புதல் உள்ளிட்டவை இதில் அடங்கும்.

இளம் பருவத்தினருக்கான பாதுகாப்பு அம்சங்கள்

Snapchat-இல் இளம் பருவத்தினரை நாங்கள் எவ்வாறு உதவுகிறோம் என்பதைக் காணுங்கள்.